Latestமலேசியா

டுவிட்டரில் நிந்தனை அம்சத்தை பதிவிட்டதாக Papagomo மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், மே 2 – மாட்சிமை தங்கிய பேரரசர் தொடர்பில் நிந்தனை அம்சத்தை டுவிட்டரில் பதிவிட்டதாக இணைய பதிவேட்டாளர்
Wan Muhammad Azri Wan Deris அல்லது Papagomo மீது இன்று காலையில் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. நீதிபதி Siti Aminah Gzazali முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது 41 வயதுடைய
Wan Mohamad Azri அதனை மறுத்தார். ” Sir azri ” என்ற கணக்கில் X தளத்தில் அவர் அந்த நிந்தனை அம்சத்தை பதிவிட்டதாக குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. ஏப்ரல் 29 ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் புக்கிட் பிந்தாங் கில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்ககத்தில் அவர் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது.

குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் மூன்று ஆண்டுகள்வரை சிறை அல்லது 5,000 ரிங்கிட் அபரதம் அல்லது இவையிரண்டும் விதிக்கப்படும் 1948ஆம் ஆண்டின் நிந்தனை சட்டத்தின் செக்சன் 4 உட்பிரிவு (1) (c) மற்றும் அதே சட்டத்தின் துணைவிதி 4 உட்பிரிவு (1)இன் கீழ் Wan Muhammad Azri மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அவருக்கு ஜாமின் வழங்குவதற்கு அரசாங்கத் தரப்பு துணைவழக்கறிஞர் DPP Khairul Azreen Mamat முன்வரவில்லை. Wan Muhammad
சார்பில் வழக்கறிஞர் Muhammad Rafqique ஆஜரானார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!