Latestமலேசியா

டெங்கில் சாலையில் steering lock பூட்டுடன் அடாவடி; பல்கலைக்கழக மாணவன் கைது

டெங்கில், அக்டோபர்-4 – செப்பாங், டெங்கில் பட்டணச் சாலையில் steering lock பூட்டுடன் அடாவடியில் இறங்கிய தனியார் பல்கலைக்கழக மாணவன் கைதாகியுள்ளான்.

வியாழக்கிழமைக் காலை 11 மணி வாக்கில் சாலை பரபரப்பாக இருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

அச்சண்டையை இதர வாகனமோட்டிகள் கைப்பேசிகளில் பதிவுச் செய்து வைரலாக்கியுள்ளனர்.

புகார்தாரர்களான பாதிக்கப்பட்ட இரு ஆடவர்களுக்கு தலையிலும் கையிலும் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து 20 வயது அம்மாணவனைக் கைதுச் செய்த போலீஸ், அவன் பயன்படுத்திய steering lock பூட்டையும் பறிமுதல் செய்தது.

டெங்கில் பட்டணத்துக்குச் செல்லும் வழியில், Jalan Air Itam பகுதியில் வாகனமோட்டும் போது இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட அதிருப்தியே அச்சண்டைக்குக் காரணமென விசாரணையில் கண்டறியப்பட்டது.

ஓர் ஆடவன், இருவரை அடிக்கப் பாய்ந்து steering lock-கை பல முறை சுழற்றும் காட்சிகள் வைரலான 44 வினாடி வீடியோவில் தெரிந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!