
நியு யோர்க், ஜன 3 – டென்னிஸ் ஜாம்பவான் மார்டினா நவ்ரதிலோவா( Martina Navratilova) , 66 வயதில் தமக்கு ஒரே நேரத்தில் தொண்டை , மார்பகப் புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறியிருக்கின்றார்.
நல்ல வேளையாக, தொடக்க கட்டத்திலே அந்த பாதிப்புகள் கண்டறியப்பட்டிருப்பதால், மன உறுதியுடன் தமக்கு ஏற்பட்ட அந்த புற்றுநோயை வென்று திரும்ப போவதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
18 Grand Slam விருதுகளை வென்று, டென்னில் உலகின் மிகச் சிறந்த விளையாட்டாளராக போற்றப்படும் மார்டினாவிற்கு 2010- இல் முதன் முதலாக மார்கப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது எல்லாம் இழந்ததாக உணர்ந்தாலும், தம்மை போன்று அவதிப்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, தமக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பை அவர் உலகிற்கு தெரியப்படுத்தினார்.