
கோப்பன்ஹேகன், ஜன 3 – டென்மார்க்கில் கோழிப் பண்ணை ஒன்றில் H5N1 பறவைக் காய்ச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து விரைவில் 50,000 கோழிகள் அழிக்கப்படவிருப்பதாக அந்நாட்டின் உணவு, விவசாய மற்றும் மீன்பிடித்துறை அமைச்சு வெளியிட்ட அறிகையில் தெரிவித்துள்ளது. புத்தாண்டு முதல் நாளில் கோழிப் பண்ணையில் சில கோழிகள் மடிந்ததால் அவை பறவைக் காயச்சலுக்கு உள்ளாகியிருப்பதாக கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும் பறவைக் காய்ச்சலுக்கு உள்ளான கோழிப்பண்ணையிலிருந்து 10 கிலோமீட்டருக்கு உட்பட்ட பகுதிக்கு மற்றவர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டதோடு அங்கிருந்து முட்டைகள் வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளனது.