Latestமலேசியா

டென்மார்க் , சுவீடன் தூதரகங்கள் முன் ஆர்ப்பாட்டம் ; Dang Wangi போலீஸ் விசாரணை

கோலாலம்பூர், ஜன 28 – சுவீடனில் அல்-குரான் புனித நூல் எரிக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, நாட்டிலுள்ள டென்மார்க், சுவீடன் தூதரகங்களின் முன் நடத்தப்பட்ட இரு ஆர்ப்பாட்டங்களை Dang Wangi போலீசார் விசாரிக்கின்றனர்.

நேற்று மதியம் மணி 2 அளவில், டென்மார்க் தூதரகத்தின் முன் சுமார் 80 பேரும், சுவீடன் தூதரகத்தின் முன் கிட்டத்தட்ட 400 பேரும் திரண்டதாக, Dang Wangi போலீஸ் தலைவர் Noor Delhan Yahaya தெரிவித்தார்.

திட்டமிடப்பட்ட அந்த ஒன்றுகூடல் தொடர்பில் முன்கூட்டியே அதிகாரத்துவ தரப்புக்கு தெரிவிக்காததை அடுத்து, அடையாளம் காணப்பட்ட நபர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள் என அவர் கூறினார்.

முன்னதாக, வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் KLCC பள்ளிவாசலில் இருந்து , அவ்விரு தூதரகங்களுக்கும் கூட்டமாக சென்றவர்களில் , PAS, Bersatu, முஸ்லீம் அரசாங்க சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்களும் அடங்குவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!