Latestமலேசியா

MH 370 விமானத்தை அதன் விமானியே கடலின் ஆழமான பகுதிக்கு செலத்தியிருக்கலாம் தொழிற்நுட்ப பதிவுகள் காட்டுவதாக போயிங் நிபுணர் கோடி காட்டுகிறார்.

கோலாலம்பூர், மார்ச் 15 – MH 370 விமானத்தை அதன் விமானியே தற்கொலை முயற்சியாக இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் கடலில் அழத்தில் திட்டமிட்டே அந்த விமானத்தில் தரையிறக்கியிருக்கலாம் என விமான ஆவணங்கள் காட்டுவதாக போயிங் நிபுணரும் பிரிட்டனின் போயிங் 777 விமானத்தின் விமானியாக பணியாற்றிய சைமன் ஹார்டி தெரிவித்திருக்கிறார்.

அந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் தொழிற்நுட்ப பதிவுகள் மூலம் இதற்கான சாத்தியம் இருப்பதாக அவர் தெரிவித்தார். கடைசி நிமிட மாற்றமாக கூடுதலாக அந்த விமானத்தில் 3,000 கிலோ எண்ணெய் நிரப்பப்பட்டுள்ளது. கூடுதலான ஆக்சிஜனும் விமானத்திற்குள் இருந்துள்ளது.

அந்த விமானத்தை செலுத்திய கேப்டன் ஜஹாரி அஹ்மத் ஷா இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார் ஏற்றியிருக்கிறார். காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் தொழில்நுட்ப பதிவுகள் இந்த ஆதாரங்களை வழங்குவதாக சைமன் ஹார்டி நம்புகிறார்.

முன்கூட்டியே பெரிய அளவிலான தற்கொலை முயற்சியை அந்த விமானி மேற்கொண்டிருக்கலாம் என 2015ஆம் ஆண்டு அந்த விமானம் தேடப்பட்டபோது ஆஸ்திரேலிய போக்குவரத்து பாதுகாப்பு பிரிவில் பணியாற்றியிருக்கும் சைமன் ஹார்டி கூறியுள்ளார்.

திட்டமிட்ட மறதிக்கு முன்பு செய்யப்பட்ட கடைசி பொறியியல் பணியை விமானியின் அறையிலிருந்துதான் செய்யமுடியுமே தவிர விமான பணியாளர்களின் வேலையல்ல. ஆக்சிஜனை அதிகப்படுத்தியது என்பது ஒரு விசித்திரமான தற்செயல் நிகழ்வு.விமானத்தில் கூடுதலான எரிபொருள் மற்றும் ஆக்சிஜனை சேர்ப்பது வினோதமானது.

கடைசிநேர மாற்றங்களை நியாயப்படுத்துவதற்கான அதற்கான பணி தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் சைமன் ஹார்டி தெரிவித்தார். ரீயூனியன் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட Flaperon , விமானம் முடியும் வரை செயலில் விமானி இருந்ததைக் குறிக்கிறது என்றும் ஹார்டி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!