
டெக்சஸ், ஜூன் 23 – அமெரிக்கா, Texas மற்றும் ஜெர்மன் Berlin னில் உள்ள தனது புதிய Tesla Inc கார் தயாரிப்பு தொழிற்சாலைகள் பல கோடி டாலர் நட்டத்தை எதிர்நோக்கியிருப்பதாக அந்நிறுவன தலைமை செயல்முறை அதிகாரி Elon Musk கூறியிருக்கிறார்.
மின்கல பற்றாக்குறையாலும், சீன துறைமுக பிரச்சனையாலும், காருக்கான உபரிப் பாகங்களைப் பெறுவதில் சிக்கலை எதிர்நோக்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதே வேளை, Shanghai -யில் உள்ள ஆலையிலும் கார் உற்பத்தி நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் Tesla திட்டமிட்டிருக்கிறது.