கோலாலம்பூர், மார்ச் 1 – நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனங்களுக்கு கூடுதல் அபராத தொகையை செலுத்த வேண்டியிருப்பதால் டோல் கட்டண வசூலிப்பை அரசாங்கம் ரத்துச் செய்ய முடியாது என பொதுப்பணி அமைச்சர் Fadillah Yusof கூறினார்.
அரசாங்கம் ஏற்க வேண்டிய இழப்பீடு தொகை மிகவும் அதிகமாக இருக்கிறது என்பதை உணர்ந்ததன் காரணமாகவே 14 ஆவது பொதுத் தேர்தலின்போது டோல் கட்டணம் அகற்றப்படும் என பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் கொள்கை அறிக்கையில் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லையென்பதையும் அவர் மக்களையில் சுட்டிக்காட்டினார்.
டோல் விவகாரத்தில் சாலையை பயன்படுத்துவோருக்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் எந்தவொரு சுமையும் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு பல்வேறு தரப்புக்களுடன் அரசாங்கம் தற்போது பேச்சு நடத்திவருவதாக Fadillah நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.