டோல் சாவடிகளில் கூடுதல் RFID முகப்புகளை அமைக்க PLUS திட்டம்

வாகனமோட்டிகளின் வசதிக்கு ஏற்ப, நெடுஞ்சாலைகளிலுள்ள டோல் சாவடிகளில் கூடுதல் RFID முகப்புகளை திறக்க, PLUS நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக, பொதுப் பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார்.
தொடக்க கட்டமாக, வரும் ஏப்ரல் மாதம் இறுதிக்குள் 12 கூடுதல் RFID முகப்புகளை அமைக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.
அது தொடர்பில், வாகனமோட்டிகளிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் தொடர்பில், விவரங்களை திரட்டுவதற்காக தாம் PLUS நிறுவனம், மலேசிய நெடுஞ்சாலை வாரியம், Touch ‘n Go நிறுவனம் ஆகியவற்றுடன் சந்திப்பு நடத்தியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
டோல் சாவடிகளில் RFID முகப்புகள் குறைவாக இருப்பதே, போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாவதாக வாகனமோட்டிகள் கூறியுள்ளனர்.
அதே சமயம், அனைத்து டோல் சாவடிகளிலும், பாதுகாப்பு கருதி ஒரே பகுதியில் அல்லது திசையில் RFID முகப்புகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதும் வாகனமோட்டிகளின் எதிர்ப்பார்புகளில் அடங்கும்.
அதனால், அப்பிரச்சனைகளுக்கு விரைத்து தீர்வுக் காணுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரை தாம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் சொன்னார்.