Latestமலேசியா

டோல் சாவடியில் 9 வாகனங்களை உட்படுத்திய விபத்து ; 6 பேர் காயம்

ஈப்போ, மார்ச் 15- ஈப்போ, சிம்பாங் புலாய் டோல் சாவடிக்குள் நுழைவும் பாதையில், 9 வாகனங்களை உட்படுத்திய விபத்தில் 6 ஆடவர்கள் காயமடைந்தனர்.

நேற்று மதியம் நிகழ்ந்த அந்த விபத்து, 3 MPV வாகனங்களையும், 3 டன் எடையுள்ள ஒரு லாரியையும், ஒரு Treler லாரியையும், 2 டன் எடையுள்ள இரு லாரிகளையும் உட்படுத்தியிருந்ததாக , பேராக் தீயணைப்பு மீட்பு படையின் உதவி இயக்குநர் Mohamadul Ehsan Mohd Zain தெரிவித்தார் .

லாரி ஒன்று முன்புறம் உள்ள மற்றொரு லாரியை இடித்ததை அடுத்து, அந்த லாரி முன்னே சென்று இதர வாகனங்களை மோதித் தள்ளியதை அடுத்து இந்த விபத்து நிகழ்ந்ததாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!