
அமெரிக்கா, ஜன 19 – சான் பிரான்சிஸ்கோ, ட்விட்டர் நிறுவனத்தின் தலைமையகத்திலுள்ள நூற்றுக்கணக்கான பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன.
ட்விட்டரின் அடையாளமாக திகழும் அதன் சின்னமும் ஏலத்தில் விடப்பட்ட பொருட்களில் அடங்குமென கூறப்படுகிறது.
எனினும், பயன்படுத்தப்பட்ட அப்பொருட்கள் சில மிக அதிக விலையில் விற்கப்பட்டதாக, இணையவாசிகள் சில கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
ட்விட்டர் நிறுவனத்தை நான்காயிரத்து 400 கோடி அமெரிக்க டாலர் விலையில் வாங்கியதால், Elon Musk-கிற்கு ஏற்பட்ட செலவினத்தை ஈடு செய்யும் வகையில் அந்த ஏலம் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.