
ஜோகூர் பாரு, மார்ச் 23 – ஜோகூர் பாருவில் Taman Melodies குடியிருப்பு பகுதியிலுள்ள ஒரு கடையின் முன் 30 வயதுடைய ஆடவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பில் பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ Kamarul Zaman Mamat தெரிவித்திருக்கிறார். இந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழியை அடையாளம் காணும் நடவடிக்கையில் போலீஸ் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அந்த சம்பவத்திற்கு முன்னதாக சுமார் 20 பேர் தகராறில் ஈடுபட்டதாக தெரிய வருவதால் குண்டர் கும்பல் தொடர்பு குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக Kamarul Zaman தெரிவித்தார்.