
பெருவின், பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் இருந்து, புதிய வகை பல்லி இனத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
Proctoporus Titans என பெயரிடப்பட்டுள்ள அவ்வகை பல்லிகள், ஆண்டிஸ் மலைப்பகுதியில், மூவாயிரத்து 241 மீட்டர் உயரத்தில் வசிப்பதாக கூறப்படுகிறது.
அடர் சாம்பல் நிறத்தில் இருக்கும் அவ்வகை பல்லிகளின், உடல் மற்றும் தலையின் ஓரங்களில் மஞ்சள் மற்றும் தங்கப் புள்ளிகள் காணப்படுகின்றன.
அதே சமயம், நீண்ட வாலையும், செதில்களையும் அவை கொண்டுள்ளன.