
பஹாங், பெந்தோங்கிலுள்ள, தங்கும் விடுதி ஒன்றின் மேல் மாடியிலிருந்து, விழுந்த கணவனும், மனைவியும் உயிரிழந்தனர்.
இம்மாதம் 16-ஆம் தேதி, இரவு மணி 9.46 வாக்கில் அச்சம்பவம் தொடர்பில் அவசர அழைப்பு கிடைத்ததாக, பெந்தோங் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஜைஹாம் முஹமட் கஹார் தெரிவித்தார்.
பேராக், தைப்பிங்கை சேர்ந்த அந்த 37 வயது ஜோடி, இம்மாதம் 11-ஆம் தேதி சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு வந்தது தொடக்க கட்ட விசாரணை வாயிலாக தெரிய வந்துள்ளது.
எனினும், அந்த தேதி தொடங்கி அவர்கள் இருவர் மட்டுமே, அங்கு தங்கி இருந்தது CCTV இரகசிய கண்காணிப்பு காமிரா பதிவு வாயிலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள வேளை ; சோதனை வாயிலாக அச்சம்பவத்தில் குற்றவியல் கூறுகள் எதுவும் இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, ஜைஹாம் முஹமட் சொன்னார்.
அதனால், அச்சம்பவம் தொடர்பில், ஆருடங்களை வெளியிட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவிறுத்தப்பட்டுள்ளது.