
ரம்பான், நவ 17 – செனவாங்கிலுள்ள நகைக் கடை ஒன்றில் தங்க காப்பு ஒன்றை வாங்கும் வாடிக்கையாளர்போல் நடித்து அதனை எடுத்துக்கொண்டு காரில் காத்திருந்த பெண்ணுடன் தப்பிபோடிய நபரும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர். கணவன் மனைவி என நம்பப்படும் அந்த தம்பதியர் கைது செய்யப்பட்டதை சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் அரிபாய் தாராவே உறுதிப்படுத்தினார். சிரம்பானிலிருந்து தெற்கை நோக்கிச் செல்லும் பகுதியில் ஓய்வு எடுப்பதற்காக வாகனம் நிறுத்தும் பகுதியில் அந்த இருவரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டதோடு பெரோடுவா ஆக்சியா கார் , 3,600 ரிங்கிட்டிற்கு அடகு வைக்கப்பட்ட நகை ரசீது, 3600 ரிங்கிட் ரொக்கமும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக அரிபாய் தாராவே தெரிவித்தார். கைது செய்யப்பட்ட ஆடவர் 14 குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.