லங்காவி, மார்ச் 3 – கடல் நீர் உள்வாங்கியதால், லங்காவி Tanjung Rhu கடற்கரையிலிருந்து கடலுக்குள் 600 மீட்டர் தூரம் வரை மணல் மேடு உருவாகிய அதிசய நிகழ்வு நிகழ்ந்தது.
கடல் இரண்டாக பிளவுபட்டிருப்பது போன்று காட்சியளித்த அந்த அதிசய நிகழ்வு ஆண்டுக்கு ஒரு முறை ஒரு மணி நேரம் மட்டுமே ஏற்படும்.
நத்தை வகைகள் மணல் மேட்டின் நெடுகே ஒதுங்கியிருந்த நிலையில் அந்த பாதை நடுவே கடலுக்குள் 600 மீட்டர் தூரம் வரை பயணிகள் நடந்து சென்று வந்தனர்.