Latestமலேசியா

தடுப்புக்காவலில் இறந்த கருணாநிதி குடும்பத்தினரின் அரசாங்கம் & போலீசிற்கு எதிரான 2வது மேல் முறையீட்டு அனுமதி மறுப்பு

புத்ரா ஜெயா, ஜூலை 11 – பதினோரு ஆண்டுகளுக்கு முன் போலீஸ் தடுப்பு காவலில் கருணாநிதி மரணம் அடைந்தது தொடர்பில் அவரது மனைவி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக அரசாங்கம் மற்றும் போலீசிற்கு எதிராக செய்துகொண்ட இரண்டாவது மேல் முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் நிரகாரித்து விட்டது. கருணநிதியின் மனைவி காளியம்மா மற்றும் அவரது இரண்டு மகன்களான யுகேஸ்வரன் ( Yugeshvaran ) மற்றும் கிஷோக்குமார் ( Kisho Kumar ) ஆகியோரின் மேல் முறையீட்டு மனுவை கூட்டரசு நீதிமன்றத்தின் மூவர் கொண்ட நீதிபதிகள் குழுவுக்கு தலைமையேற்ற நீதிபதி டத்தோ நளினி பத்மநாதன் (Nallini Pathmanathan) தள்ளுபடி செய்தார்.

ஏற்கனவே நீதிமன்றம் விசாரணை நடத்திய வழக்கு மனு குறித்து வாதிகள் சமர்ப்பித்த மேல்முறையீட்டை ஏற்க வேண்டிய அவசியம் இல்லையென நீதிபதி நளினி சுட்டிக்காட்டினார். கருணாநிதி தடுப்புக் காவலில் இறந்துள்ளார். அவர் தனது உடலில் 49 காயங்களுக்கு உள்ளாகியிருக்கிறார். அது துரதிஷ்டவசமானதுதான். எனினும் இது தொடர்பான விசாரணையை நீதிமன்றம் நடத்திவிட்டதால் இந்த விவகாரத்தில் ஒன்றும் செய்ய முடியாது என நளினி தீர்ப்பளித்தார்.

ஒருவரின் தனிப்பட்ட அடிப்படை சுதந்திரம் மீதான கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் 5ஆவது பிரிவு தொடர்பில் விவாதிக்கப்பட்டு விட்டதையும் நளினி தெரிவித்தார். 1956ஆம் ஆண்டின் சிவில் சட்டத்தின் 7 ஆவது விதியின் கீழ் முதல் வழக்கு மனுவும் , பொது சட்டத்தின் கீழ் இரண்டாவது முறையீடும் சமர்ப்பிக்கப்பட்டதாக காளியம்மா மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் Manoharan குறிப்பிட்டிருந்தார். 2013 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி கைது செய்யப்பட்ட கருணாநிதி போலீஸ் தடுப்புக் காவலில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது 2013ஆம் ஆண்டு ஜூன் 1ஆம்தேதி இறந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!