Latestஉலகம்

தடுப்புக் காவலில் இளம் பெண் மரணம்; வலுக்கும் ஆர்ப்பாட்டம்

துபாய், செப் 22 – ஈரானில், கடந்த சனிக்கிழமை தொடங்கி ஐந்தாவது நாளாக நீடிக்கும் ஆர்பாட்டத்தில், குறைந்தது எண்மர் கொல்லப்பட்டனர். அதில் போலீஸ் அதிகாரி ஒருவரும், இராணுவ வீரர் ஒருவரும் அடங்குவர். ஆர்ப்பாட்டத்தின் போது மூண்ட கைகலப்பின் போது அவர்கள் கொல்லப்பட்டனர்.

ஹிசாப்பை முறையாக அணியாத காரணத்தால் கைது செய்யப்பட்ட இளம் பெண் ஒருவர் தடுப்பு காவலில் மரணமடைந்த சம்பவத்தால் சினமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அச்சம்பவத்தை அடுத்து, ஈரானில் இணைய சேவைகளும் முடக்கப்பட்டிருப்பது மக்களின் சினத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. ஹிஜாப்பை சரியாக அணியாததால், தலைநகர் தெரானில் கைது செய்யப்பட்ட 22 வயது மாசா அமினி எனும் இளம் குர்திஷ் பெண் தடுப்பு காவலில் மரணமடைந்தார்.

அதனால், முதலில் ஈரானில் குர்திஷ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தொடங்கிய ஆர்ப்பாட்டம், பின்னர் நாடு முழுவதும் 50-பதுக்கும் அதிகமான பகுதிகளுக்கு விரிவடைந்துள்ளது. 2019-ஆம் ஆண்டுக்கு பின் ஈரானில் மேற்கொள்ளப்படும் மிக பெரிய ஆர்ப்பாட்டமாகவும் இது கருதப்படுகிறது.

எனினும், ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுக் கொன்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் மறுத்தனர். அமினியின் மரணத்தை தொடர்ந்து, பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த சினத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, சுதந்திரம், அந்நாட்டில் விதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு கட்டுபாடுகள், அந்த கட்டுபாடுகளால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பின்னடைவு ஆகியவையும் அதிலடங்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!