Latestமலேசியா

தடுப்புக் காவலில் சேகர் மரணம் மனைவி விமலா தேவிக்கு ரி.ம 446,780 இழப்பீடு

கோலாலம்பூர், செப் 8 – தடுப்புக் காவலின்போது மரணம் அடைந்த தனது கணவர் சேகருக்கு இழப்பீடாக ரி.ம 446,780 பெறுவதில் அவரது மனைவி விமாலா தேவி வெற்றி பெற்றார். 2017 ஆம் ஆண்டு போட்டிக்சன் போலீஸ் தலைமையகத்தின் லோக்காப்பில் மரணம் அடைந்த சேகருக்கு இழப்பீடாக விமலா தேவி கோரியிருந்த தொகையை சிரம்பான் உயர்நீதிமன்றம் அனுமதித்தது. விமலா தேவி கோரியிருந்த இழப்பீட்டுத் தொகையை நீதிபதி வான் ஃபாதிலா வான் இட்ரிஸ் அனுமதித்தார். மரணம் அடைந்த சேகரின் உடலில் சவப்பரிசோதனை மேற்கொண்ட உடற்கூறு மருத்துவ நிபுணரின் சாட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு நீதிமன்றத்தின் முடிவு இருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

லோக்காப்பில் இருந்தபோது அவரது உடலில் ஏற்பட்ட காயம்தான் சேகரின் மரணத்திற்கு காரணமாக இருந்ததால் வாதி விமாலா தேவியின் 446,700 இழப்பீடு கோரிக்கைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்குவதாக நீதிபதி வான் ஃபாதிலா தீர்ப்பளித்தார். தடுப்புக் கைதியின் மரணத்திற்கு போலீஸ் பொறுப்பேற்க வேண்டும் என்பதையும் நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்தார். சம்பவம் நிகழ்ந்த போது மரணம் அடைந்த 46 வயதுடைய சேகர் அங்காடி கடை உதவியாளராக இருந்துள்ளார். ஒரு குழந்தைக்கு தாயான அவரது மனைவி வேலை செய்யவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!