Latestமலேசியா

தடுப்புக் காவலில் பாலமுருகன் மரணம்; போலீஸ் அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கோலாலம்பூர், ஆக 30- 5 ஆண்டுகளுக்கு முன் தடுப்புக் காவலில் S. பாலமுருகன் மரணம் அடைந்ததற்கு போலீஸ் மற்றும் அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு பிப்ரவரி 8-ஆம் தேதி பாலமுருகன் மரணம் அடைந்தது தொடர்பில் அவரது குடும்பத்தினர் மேற்கொண்ட சிவில் வழக்கில் அந்த குடும்பத்திற்கு ஆதரவாக நீதிமன்றம் இந்த தீர்ப்பை தெரிவித்ததாக Lawyers for liberty இயக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் Zaid Malek தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கம் மற்றும் போலீஸ் வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை உறுதிப்படுத்த மற்றொரு தேதியில் சிவில் நீதிமன்றம் கூடும் என அவர் கூறினார். பாலமுருகன் மரணத்திற்கு போலீஸ் மற்றும் அரசாங்கம் பொறுப்பு வகிப்பதால் அவரது மரணத்திற்கு இழப்பீடு வழங்கும் தார்மீக பொறுப்பும் கடப்பாடும் அரசாங்கத்திற்கும் போலீசிற்கும் உண்டு என உயர் நீதிமன்ற நீதிபதி Ahmad Bache தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!