கிள்ளான், பிப் 5 – போதைப் பொருள் வினியோகித்ததன் தொடர்பில் கைது செய்யப்பட்டு கிள்ளானில் போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 35 வயதுடைய ஆடவர் ஒருவர் மரணம் அடைந்தார். பண்டமாரான் போலீஸ் நிலையத்தில் நேற்று விடியற்காலை மணி 6.50 அளவில் அந்த நபர் சுயநினைவின்றி காணப்பட்டதாகவும் அதன் பிறகு காலை மணி 7.30 அளவில் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார் என புக்கிட் அமான் உயர்நெறித்
துறையின் இயக்குனர் Azri Ahmad தெரிவித்தார். இவ்வாண்டு தடுப்புக் காவலில் நிகழ்ந்த 7ஆவது மரணச் சம்பவம் இதுவாகும். அந்த சந்தேகப் பேர்வழியின் மரணத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. எனினும் நாங்கள் இது தொடர்பாக விசாரணை நடத்துவோம் என Azri Ahmad கூறினார்.