Latestமலேசியா

தனது நிலத்தை ஆயார் தாவார் தோட்ட தமிழ்ப் பள்ளிக்கு உரிமையாக்குவதற்கு உதவிய சீன ரப்பர் வர்த்தகருக்கு மக்கள் பாராட்டு

கோலாலம்பூர், டிச 13 – தனது நிலத்தில் இருந்த ஆயார் தாவார் தோட்ட தமிழ் தொடக்கப்பள்ளிக்கு அந்த நிலத்தை குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கு உதவியதற்காக அதன் உரிமையாளரான சீன ரப்பர் வர்த்தகர்
யேக் டோங் பிங் மக்களின் பாராட்டையும் அபிமானத்தையும் பெற்றுள்ளார்.

பேராக் சித்தியவானைச் சேர்ந்த 78 வயதான அவர் பள்ளியிலிருந்து நில வரிக்கான கட்டணத்தை கூட இதுவரை வசூலிக்காமல் தொடர்ந்து அதனை செலுத்தி வந்துள்ளார். உண்மையான மலேசியர் என்பதற்கு அவர் நல்லதொரு முன் உதாரணமாக விளங்கி வருகிறார்.

தற்போது பள்ளி இருக்கும் அந்த நிலத்தை 350,000 ரிங்கிட்டிற்கு மட்டுமே அவர் விற்பனை செய்தார். அதற்கு மேல், மீண்டும் மற்றொரு 50,000 ரிங்கிட்டை அவர் நன்கொடையாக அளித்தார்.

பள்ளிக்கு நிலம் வாங்குவதில், நிதி சேகரிப்பதில் சிக்கல் இருப்பதைக் கண்டறிந்த அவர் நிலத்தின் விலை 300,000 ரிங்கிட் குறைக்கப்பட்டது. இந்த கருணை உள்ளத்திற்காக பள்ளியின் தலைமையாசிரியர், இதர ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பாராட்டுகளையும் யேக் பெற்றுள்ளார்.

1938ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆயர் தாவார் தோட்ட தமிழ்ப் பள்ளியில் கடந்த 30 ஆண்டுகளாக பள்ளிக்கான நில வாடகையை வசூலிக்காமல் அதனை தாமாகவே செலுத்தி வந்துள்ளார். சீனப் புத்தாண்டின்போது பள்ளி நடவடிக்கைகளுக்கு யேக் நிதியுதவி செய்வார் மற்றும் மாண்டரின் ஆரஞ்சுகளையும் வழங்குவார்.

நான் பணக்காரன் அல்ல, என்னால் இன்னும் நில வரிக்கான கட்டணத்தை செலுத்த முடியும்,” என்று அவர் கூறினார். இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோர் பால் மரம் வெட்டும் தொழிலாளர்களின் பிள்ளைகள். அந்த தோட்டத் தொழிலாளர்களிடமிருந்த எனக்கு கிடைத்த ஆதரவை இப்போது நான் திருப்பி தருகிறேன் என யேக் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!