கோலாலம்பூர், பிப் 12 – தடுப்புக் காவலில் ஏற்படும் ஒவ்வொரு மரணச் சம்பவங்களையும் போலீஸ் கடுமையாக கருதுகிறது. இத்தகைய மரணச் சம்பவங்கள் அனைத்தும் துல்லியமாக விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என புக்கிட் அமான் உயர் நெறி பிரிவின் இயக்குனர் டத்தோ Azri Ahmad தெரிவித்தார். தடுப்புக் காவலில் ஏற்படும் மரணங்கள் தொடர்பாக மரண விசாரணையை நடத்துவதற்கான நடைமுறையும் அமல்படுத்தப்படும் என அவர் கூறினார். அதோடு முழுமையான விசாரணைக்குப் பிறகு அதன் அறிக்கை மேல் நடவடிக்கைக்காக அரசு தரப்பு வழக்கறிஞர் அல்லது சட்டத்துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என Azri Ahmad விவரித்தார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்2 hours ago