கோலாலம்பூர், பிப் 22 – 9 ஆண்டுகளுக்கு முன் தம்பினில் போலீஸ் தடுப்புக் காவலில் மரணம் அடைந்த தமது கணவருக்கு சட்டப்பூர்வ இழப்பீடை பெறுவதற்காக காளியம்மா என்ற குடும்ப மாது செய்திருந்த வழக்கு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்க முடியாது என நீதித்துறை ஆணையர் John Lee தீர்ப்பளித்தார். தடுப்புக் காவலில் ஒருவர் மரணம் அடைந்திருந்தால் அவரது குடும்பத்தினர் சம்பவம் நடந்த 36 மாதங்களுக்குள் அரசாங்கத்திற்கு எதிராக வழக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும் என மூவர் கொண்ட அமர்வு நீதிமன்றத்திற்கு தலைமையேற்றிருந்த John Lee தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதிக்கு முன்னதாகவே காளியம்மா தமது இழப்பிடு கோரிக்கையை சமர்ப்பத்திருக்க வேண்டும் அவர் சுட்டிக்காட்டினார். காளியம்மாவின் கணவரான கருணாநிதி 2013 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஜூன் 1 ஆம் தேதி அவர் தடுப்புக் காவலில் மரணம் அடைந்தார். அவரது உடலில் 49 காயங்கள் இருந்தன.