Latestமலேசியா

தடுப்பூசிக்காக தொழிலாளர்களிடம் கட்டணம்; முதலாளிகளை எச்சரிக்கும் அமைச்சர்

கோலாலம்பூர், ஜூன் 11-கோவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள தங்களது தொழிலாளர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்க முயற்சிக்கும் முதலாளிகளுக்கு எதிராக , மனிதவள அமைச்சர்   டத்தோ ஶ்ரீ எம். சரவணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வேலையிடங்களில் செலுத்தப்படும் கோவிட் தடுப்பூசிக்கு தொழிலாளர்கள் குறைந்தது, 50 ரிங்கிட் கட்டணத்தை செலுத்தும்  பரிந்துரையை, மலேசிய வர்த்தக வளாக சங்கம் முன்வைத்திருந்தது.

அதன் தொடர்பில் கருத்துரைத்த அமைச்சர் வேலையிடங்களில் செலுத்தப்படும் கோவிட் தடுப்பூசிகள் , தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ்  இலவசமாகவே வழங்கப்படுகிறது என குறிப்பிட்டார்.  எனவே, அந்த தடுப்பூசிக்கு முதலாளிகள்  கட்டணம்  விதிப்பது, ஏற்புடையது அல்ல என்றாரவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!