Latestமலேசியா

தடுப்பூசிக்குப் பின் பக்க விளைவு ; 17 பேர் அரசாங்க நிதியுதவியைப் பெறத் தகுதி

கோலாலம்பூர், மார்ச் 4 – கோவிட்- 19 தடுப்பூசி செலுத்தியதால் பக்க விளவுக்கு ஆளான 17 பேர் அரசாங்கத்தின் சிறப்பு நிதியுதவியைப் பெற தகுதி பெற்றுள்ளனர். அவர்களுக்கு மொத்தம் 1 லட்சத்து 95,000 ரிங்கிட் நிதி பகிர்ந்தளிக்கப்படுமென, சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் , மக்களவைக்கு வழங்கிய எழுத்துப் பூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி வரையில், பக்க விளைவு தொடர்பில் இழப்பீடு கோரி சுகாதார அமைச்சு 187 விண்ணப்பங்களைப் பெற்றது. அதில் 23 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

கடந்தாண்டு மார்ச் 22-ஆம் தேதி அரசாங்கம் அறிவித்த நிதியுதவியின் கீழ், கோவிட் தடுப்பூசிக்குப் பின்னர் கடுமையான பக்க விளைவுகளுக்கு ஆளானவர்கள் 50,000 ரிங்கிட்டிக்கும் மேற்போகாத இழப்பீட்டு தொகையைப் பெறலாம்.

நிரந்தர உடல் பாதிப்புக்கு ஆளானவர்கள் அல்லது இறப்பு ஏற்பட்டால் 5 லட்சம் ரிங்கிட்டுக்கும் மேற்போகாத இழப்பீட்டைப் பெற முடியும். தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், கோவிட் தடுப்பூசி போட்டு 3 மாத கால கட்டத்திற்குள் கடுமையான பக்க விளைவுக்கு ஆளானவர்களே அந்த நிதியுதவிக்கு தகுதி பெறுவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!