கோலாலம்பூர் , பிப் 21 – கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொண்ட சில வாரங்களில் சிறுவன் உயிரிழந்ததாகக் கூறப்படுவது தொடர்பில், சவப் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக, சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறியுள்ளார்.
அச்சிறுவனின் மரணம் தொடர்பில் இதர விசாரணைகளுக்கான அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், அதன் தொடர்பில் மாநில சுகாதார துறையினருடனும், தடயவியல் குழுவினருடனும் அணுக்கமாக ஒத்துழைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, 13 வயதான அச்சிறுவனின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிடுமென அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறியுள்ளார்.