கோலாலம்பூர், ஏப் 14 – கோவிட் -19 தொற்று கண்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், இனி தங்களை கட்டாயம் தனிமைப் படுத்திக் கொள்ளத் தேவையில்லை.
அவர்கள் கோவிட்டிற்கு எதிராக தடுப்பூசி போடாதவர்களாக இருந்தாலும் அல்லது எந்த வகை தடுப்பூசியாக இருந்தாலும், இனி அவ்வாறு செய்வது கட்டயாமல்ல என சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்கு முன்பு , பூஸ்டர் தடுப்பூசி போட்டவர்களும் , தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாதவர்கள் மட்டுமே, தனிமைப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.