Latestமலேசியா

தடுப்பூசி போடுவதற்கு மாவட்டங்களை கடக்க போலீஸ் கடிதம் தேவையில்லை

கோலாலம்பூர், மே 4- தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக முன்கூட்டியே ஏற்பாடு செய்தவர்கள் தாங்கள் வசிக்கும் மாவட்டங்களை கடந்து செல்வதாக இருந்தால் போலீசாரின் அனுமதிக் கடிதம் தேவையில்லை என தேசிய கோவிட் தடுப்பூசி திட்டத்திற்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சரான கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

தடுப்பூசி போடுவதற்காக மாவட்டங்களை கடந்து செல்பவர்கள் போலீஸிடம் கடிதம் பெற வேண்டும் என பாதுகாப்புக்கான முதன்மை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இதற்கு முன் கூறியிருந்ததை கைரி மறுத்தார்.

தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பில் MySejahtera செயலியில் முன்கூட்டியே ஏற்பாடு செய்ததற்கான ஆதாரங்கள், அகப்பக்கம் மற்றும் எஸ்.எம்.எஸ் குறுஞ்செய்திகளை காட்டினால் போதும். போலீஸ் கடிதம் தேவையில்லையென கைரி டுவிட் செய்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!