Latestஇந்தியா

தடுப்பூசி போட வந்த செவிலியர்களை சாமி ஆடி துரத்திய மூதாட்டி

புதுச்சேரி, டிச 2 – இந்தியா புதுச்சேரியில், கோவிட் தடுப்பூசி செலுத்த வந்த செவிலியர்களை, சாமியாடி துரத்திய மூதாட்டியின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் மக்களுக்கு நேரடியாக வீட்டிற்கே சென்று தடுப்பூசி போடும் நடவடிக்கையில் செவிலியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது வயதான தம்பதியர் தங்களுக்கு தடுப்பூசி வேண்டாமனெ மறுத்தனர்.

அவர்களை எப்படியாவது சமாதானப்படுத்தி தடுப்பூசி போட வைக்கலாமென செவிலியர்கள் ஈடுபட்டபோது, தனது காலணிகளை கழற்று , ஆக்ரோஷமடைந்து சாமி வந்தவர் போல் மூதாட்டி ஆடத் தொடங்கினார். இறுதியில் செவிலியர்கள் பின்வாங்கி, அங்கிருந்து கிளம்பினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!