சைபர்ஜெயா, செப்டம்பர் 2 – மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்.சி.எம்.சி, செப்டம்பர் 1ஆம் திகதி முதல், குறுஞ்செய்திகளில் தடைசெய்யப்பட்ட உள்ளடக்கத்திற்கு அதிரடியாகத் தடை விதித்தது.
இந்த தடைசெய்யப்பட்ட உள்ளடக்கத்தில் hyperlink எனும் இணைப்பு, தனிப்பட்ட தகவலுக்கான கோரிக்கைகள் மற்றும் அழைப்பு எண்கள் ஆகியவை அடங்கும்.
சம்பந்தப்பட்ட மோசடி அபாயத்திலிருந்து பயனர்களைப் பாதுகாக்கவே இந்த அதிரடி தடை அமலாக்கத்திற்கு வருகிறது.
அதன்படி, தடைசெய்யப்பட்ட உள்ளடக்கம் கொண்ட குறுந்தகவல்களுக்கு எதிராக எப்போதும் விழிப்புடன் இருக்குமாறும் பொதுமக்களை எம்.சி.எம்.சி கேட்டுக்கொள்கிறது.
இதற்குமேல், இதுபோன்ற குறுஞ்செய்திகளைப் பெறுபவர்கள், எம்.சி.எம்.சி இணையத்தளத்தில், பெறப்பட்ட SMS-யின் screenshot-உடன் புகாரைச் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.