Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்

தடை செய்யும் சட்டத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்றமும் டிக் டோக்கை கை விட்டது; அதன் விதி இனி டிரம்ப்பின் கையில்

 

வாஷிங்டன், ஜனவரி-18 – அமெரிக்க மண்ணில் டிக் டோக்கை தடை செய்யும் சட்டத்தை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நிலைநிறுத்தியுள்ளதால், அந்தச் சமூக ஊடகத்தின் சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

அவ்விஷயத்தில் அமெரிக்க அரசாங்கம் பேச்சு சுதந்திரத்தை மீறவில்லை; மாறாக, தேசியப் பாதுகாப்புக்கு இருக்கும் அச்சுறுத்தல்களையே சுட்டிக் காட்டியுள்ளது.

அது நியாயமானதும் கூட என நீதிமன்றம் அறிவித்தது.

இத்தீர்ப்பை அடுத்து, சீனாவைச் சேர்ந்த டிக் டோக்கின் தாய் நிறுவனமான ByteDance, ஞாயிற்றுக்கிழமைக்குள் அமெரிக்க டிக் டோக் செயல்பாட்டு உரிமையை விற்றே ஆக வேண்டும்; இல்லையென்றால் அமெரிக்காவில் டிக் டோக் தடை செய்யப்படும்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக் குறித்து CNN-னிடம் பேசிய டிரம்ப், திங்கட்கிழமை மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்றதும் அது குறித்து முடிவெடுக்கப் போவதாகக் கூறினார்.

இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் தமக்குக் கொடுத்திருப்பதால், என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார் அவர்.

அதிபரானதும், இன்னும் சற்று காலத்திற்கு அமெரிக்காவில் டிக் டோக்கை செயல்பட தாம் அனுமதிக்கக் கூடுமென இதற்கு முன் டிரம்ப் கோடி காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆக டிக் டோக் கடைசியாக நம்பியிருப்பது டோனல்ட் டிரம்ப்பை மட்டுமே…..

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!