
கோலாலம்பூர், ஜன 19 – ‘புலாவ்’ படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கம், தங்களிடம் சமர்ப்பிக்கப்பட்டதை காட்டிலும் மாறுபட்டிருப்பதாக, LPF திரைப்பட தணிக்கை வாரியம் கூறியுள்ளது.
தணிக்கைக்கு அனுபப்பட்ட டிரெய்லரும், சமூக ஊடகங்களில் பகிரப்படும் டிரெய்லரும் மாறுபட்டிருப்பதாக, திரைப்பட தணிக்கை வாரியம் தெரிவித்தது.
சமூக ஊடகங்களில் பகிரப்படுவதை போல அது ஆபாச படம் அல்ல. மாறாக, திகில் படமாகவே அது வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இணையத்தில் வெளியிடப்படும் திரைப்பட டிரெய்லர்கள், திரைப்பட தணிக்கை வாரியத்தின் அதிகாரத்திற்கு உட்படாது எனவும் அவ்வாரியம் தெளிவுப்படுத்தியது.
முன்னதாக, ‘புலாவ்’ திரைப்படத்தின் டிரெய்லர் பார்ப்பதற்கு ஏற்றதாக இல்லையென, தொடர்பு இலக்கவியல் அமைச்சர் பாஃமி பாட்சில் கூறியிருந்தார்.