கோலாலம்பூர், ஏப் 7 – தாம் பேசிய உண்மையான விவரங்களை வெளியிடாமல் அவற்றை வெட்டி ஒட்டி உள்நோக்தோடு தமக்கு எதிராக அதனை வெளியிட்ட தரப்பினருக்கு எதிராக மனித உரிமை சம்ளேன தலைவர் எஸ் .சசி குமார் போலீசில் புகார் செய்துள்ளார்.
இந்து சமயத்திற்கு எதிராக முகமட் ஷம்ரி வினோத் காளிமுத்து போன்ற சமய போதனையாளர்கள் சிலர் உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு நாட்டில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி ஏப்ரல் 1ஆம் தேதி புத்ரா ஜெயாவில் உள்ள சட்டத்துறை அலுவலகத்தில் தாம் மகஜர் கொடுக்கும் நிகழ்ச்சியில் தாம் பேசிய காணொளியை வெட்டி ஒட்டி தணிக்கை செய்து சில பொறுப்பற்ற தரப்பினர் தமக்கு எதிரான காணொளியை வெளியிட்டதாக எஸ் .சசி குமார் வணக்கம் மலேசியாவிடம் தெரிவித்தார்.
நாட்டில் கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இஸ்லாமிய சமயம் பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற அம்சத்தை வலியுறுத்தும் வகையில் சட்டத்துறை தலைவரின் அலுவலகத்தில் பேசியிருந்ததாகவும் அது தொடர்பாக வெளியிடப்பட்ட காணொளியை திரித்து , வெட்டி ஒட்டி இஸ்லாம் , அரச அமைப்பு மற்றும் கூட்டரசு அரசியலமைப்பை சிறுமைப்படுத்தியிருப்பது போன்ற தோற்றத்தில் தமது உரை அடங்கிய காணொளி வெளியிடப்பட்டுள்ளதாக சசிகுமார் தெரிவித்தார்.
ஏப்ரல் 4ஆம் தேதி முகநூல் மற்றும் டிக்டோக்கில் அந்த காணொளி பதிவிட்டிருப்பதை கண்டு தாம் தாமான் ஸ்ரீ மூடா போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதாக அவர் கூறினார். இது தொடர்பாக போலீசாருக்கும் தாம் விளக்கம் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.