Latestமலேசியா

தண்ணீர்மலை ஆலயத்தில் தைப்பூச SOP யை தளர்த்துவீர்; பினாங்கு அரசு கோரிக்கை

ஜோர்ஜ் டவுன்,ஜன 14 – இம்மாதம் 18ஆம் தேதி தண்ணீர்மலை பாலதண்டாயுதபாணி ஆலய தைப்பூசத்திற்கான SOP யில் சற்று தளர்வை அனுமதிக்கும்படி தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் தேசிய ஒற்றுமை அமைச்சருக்கு பினாங்கு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ரதத்துடன் உடன் செல்வோரின் எண்ணிக்கை ஆலய நிர்வாகக் குழுவைச் சேர்ந்த 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என கூறப்பட்டிருப்பது மற்ற பக்தர்களுக்கு நியாயமாக இல்லை. எனவே ரத ஊர்வலத்தின் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 500 பேராக அதிகரிக்கப்பட வேண்டும் என பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி.ராமசாமி மற்றும் ஆலய தலைவர் ஆர்.சுப்ரமணியம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் ஒரு நாளில் 3,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்க முடியும் என்ற வரம்பை ஒவ்வொரு 30 நிமிட பூஜையின்போது 3,000 பேர்வரை அனுமதிக்க வேண்டும் என சுப்ரமணியம் கேட்டுக்கொண்டார். 18 வயதுக்கு குறைந்த பிள்ளைகளும் அவர்களது பெற்றோர்களுடன் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதோடு தைப்பூசத்திற்கு முதல் நாளும் தைப்பூச தினத்தன்றும் காலை 5 மணியிலிருந்து இரவு 11 மணிவரையிலும், ஆலயம் செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட் வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!