Latestமலேசியா

தண்ணீர் மீட்டரை உடைத்த பொறுப்பற்ற  ஆடவரை SPAN தேடுகிறது

கோலாலம்பூர், செப் 5 – அண்மையில் கடையின் முன்  இருந்த தண்ணீர்  மீட்டரை மிதித்து உடைத்த நபரை,  SPAN  தேசிய நீர் சேவை ஆணையம்  தேடி வருகின்றது.

பெண்ணுடன் நடந்து செல்லும் ஆடவர், திடிரென , நடைபாதை ஓரமுள்ள மீட்டரை மிதித்து உடைக்கும் 19 வினாடிகள் கொண்ட காணொளியை, SPAN அதன்  முகநூல் அகப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நீர் விநியோக கருவிகளை சேதப்படுத்துவது,  2006-ஆம்  ஆண்டு  நீர்  சேவை தொழிற்துறை சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாகும்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக அபராதமும்  சிறைத் தண்டனையும் விதிக்க முடியும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!