கூடாட், பிப் 17 – சபா, Kudat, Kampung Landung Ayang பகுதியில், நீரின் மீது கட்டப்பட்டிருந்த 50 வீடுகள் தீயில் அழிந்தன.
நேற்று மாலை மணி 7 வரையில், இரு தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த தீ சம்பவத்தில் உயிருடற் சேதம் ஏதும் ஏற்படவில்லை என சபா தீயணைபு மீட்பு படையின் பேச்சாளர் தெரிவித்தார்.