Latestமலேசியா

தந்தைக்கு மாரடைப்பு; பதற்றத்தில் அவசரப் பிரிவின் முன் காரை நிறுத்திய மகன்

ஈப்போ, செப் 5- தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் பதற்றமடைந்த ஆடவர் ஒருவர், நேற்றிரவு ஈப்போ ராஜா பெருமாய்சூரி பய்னூன் மருத்துவமனையின்  அவசரப் பிரிவின் முன், மக்கள் நடமாடும் பகுதியில்   காரை நிறுத்தியதாக, பேராக்  போலீஸ் தலைவர்  டத்தோ மியோர்  ஃபாரிடாலத்ராஷ் வாஹிட் தெரிவித்தார்.

அவசர சிகிச்சைப் பிரிவின் நுழைவாயிலின் முன் காரை நிறுத்திய  அந்த ஆடவர், பின்னர் வெளியே வந்து  உரக்கக் கத்தி உதவி கேட்டார்.

அவரை மருத்துவமனை தரப்பினர்  சமாதானப்படுத்தியதோடு, காரை  முறையான இடத்தில் நிறுத்தி வைக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டார்.

நேற்றிரவு மணி 11.30-க்கு நிகழ்ந்த  அந்த சம்பவத்தில், எந்தவொரு விதிமீறலும் நிகழவில்லை என்றும், அதன் தொடர்பில் போலீஸ் புகார் எதுவும் செய்யப்படவில்லை என்றும் டத்தோ மியோர் தெரிவித்தார்.

முன்னதாக  சம்பந்தப்பட்ட  ஆடவர் பதற்றத்துடன் மருத்துவமனை வந்தடைந்த காணொளி  சமூக ஊடகங்களில் வைரலாகியிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!