பினாங்கு, அக்டோபர் 1 – ஆலோங்கிடம் தந்தை வாங்கிய RM20,000 ரிங்கிட் கடனைத் அடைப்பதற்கு, பாலியல் தொழிலில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாக, பெண் ஒருவர் கூறியதைத் தொடர்ந்து பினாங்கு காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
சமீபத்தில், பெண் ஒருவர் டிக்டோக் போட்காஸ்ட் (podcast) ஒன்றின் வாயிலாக இச்சம்பவம் குறித்துப் பேசியுள்ளார்.
அதில், தனது தந்தையின் கடனை செலுத்துவதற்காக, விபச்சாரத்தில் தள்ளப்பட்டதைக் குறித்த சம்பவத்தை அந்தப் பெண் வெளிப்படுத்தியிருக்கிறார்.
கடனுக்காகத் தனது தந்தை தனது தாயின் பெயரையும் குடும்பத்தையும் உத்தரவாதமாகப் பயன்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், நேரடியாக ஒளிபரப்பப்பட்ட அந்த போட்காஸ்ட் சமூக வலைத்தளங்களில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
உதவி கேட்டு அந்த பெண் பேசிய ஏழு நிமிட ஆடியோ கிளிப்பைத் தொடர்ந்து, விசாரணையைத் தொடங்கியுள்ள பினாங்கு காவல்துறை, அவர் இருக்கும் இடத்தை கண்காணிக்க தொடர்ந்து முயன்று வருகின்றது.