Latestமலேசியா

தந்தை riverse செய்த கார் மோதி 1 வயது பெண் குழந்தை பலி

ஜோகூர் பாரு, மார்ச்-30 – ஜோகூர் பாரு, தாமான் டேசா ஹார்மோனியில் தந்தை பின்னால் riverse செய்த கார் மோதி, 1 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

நெஞ்சை உலுக்கும் இச்சம்பவம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு நிகழ்ந்ததாக, பாசீர் கூடாங் போலீஸ் தலைவர் துணை ஆணையர் Mohd Sohaimi Ishak கூறினார்.

சம்பவத்தின் போது காரை வெளியே எடுத்த 27 வயது அவ்வாடவர், பின்பக்க இடது டயரிலிருந்து சத்தம் கேட்டு இறங்கிச் சென்று பார்த்தார்.

அங்கே டயரின் பின்னால் அவரின் குழந்தை இரத்த வெள்ளத்தில் அசைவற்றுக் கிடந்தது கண்டு அவர் பதறிபோனார்.

உடனடியாக குழந்தையை சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார்.

எனானும் கார் மோதியதால் தலையில் படுகாயமடைந்த குழந்தை, சிகிச்சைப் பலனளிக்காது உயிரிழந்தது.

இதையடுத்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.

இது போன்ற அசம்பாவிதங்களைத் தவிர்க்க, வாகனத்தை எடுக்கும் முன், பிள்ளைகள் குறிப்பாக சிறு குழந்தைகளின் நடமாட்டத்தை கண்காக்குமாறு போலீஸ் பொது மக்களை அறிவுறுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!