Latestமலேசியா

தனது சுயசரிதை படத்தை கண்டு களித்தார் பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், மே 9 – தமது வாழ்க்கை மற்றும் அரசியல் போராட்டங்களை சித்தரிக்கும் Premiere Anwar, The Untold Story என்ற திரைப்படத்தின் முன்னோட்ட காட்சியை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தமது துணைவியார் டத்தின்ஸ்ரீ டாக்டர் வான் அஸிஸாவுடன் கண்டு களித்தார்.

அந்த திரைப்படத்தின் விநியோகிப்பாளரான DMY Creation நிறுவனத்தின் தயாரிப்பாளர் Datuk Mohamad Yusoff , உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ Nasution Ismail, தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் Fahmi Fadzil , பிரபல பாடாகி டத்தோஸ்ரீ
Siti Nurhaliza என 250 பிரமுகர்கள் அந்த திரைப்படத்தின் பிரதான காட்சியை காண வந்திருந்தனர்.

Anwar, The Untold Story திரைப்படத்தை இந்தோனேசியாவின் Viva Westi இயக்கியிருந்தார். உள்ளூர் நடிகர் Kamil Zahaari அன்வார் பாகத்திலும் இந்தோனேசிய நடிகை Acha Septriasa டாக்டர் வான் அஸிஸா பாகத்திலும் நடித்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு மணி 8.15 அளவில் Dadi cinema, Pavillion-னில் நடைப்பெற்ற முன்னோட்ட காட்சிக்கு அன்வார் வருகை புரிந்தபோது அங்கு கூடியிருந்த மக்கள் ரிபோர்மாசி என்று குரல் எழுப்பினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!