Latestமலேசியா

தனது நிர்வாண படங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொண்ட பேராசிரியர் குறித்த புகார் பெற்றதை மலாயா பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியது

கோலாலம்பூர், டிச 18 – தனது நிர்வாணப் புகைப்படங்களைப் பல மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படும் பேராசிரியர் ஒருவரைப் பற்றிய புகாரை மலாயா பல்கலைக்கழகம் பெற்றுள்ளது. மலாயா பல்கலைக்கழகத்தின் UMFC எனப்படும் மகளிர் நலன் மன்றம் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து புகார் கிடைக்கப்பெற்றதாக அந்த பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியதை உள்நாட்டு உள்ளூர் ஊடக நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. தற்போது விசாரணைக்காக இந்த விவகாரம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டிருப்பதால் இது தொடர்பான மேல் அறிக்கை எதனையும் மலாயா பல்கலைக்கழம் தெரிவிக்கவில்லை. இந்த புகார் தொடர்பான மேல் விவரங்களை மலாயா பல்கலைக்கழகம் தொடர்ந்து கண்காணித்து வரும். மேலும் இந்தப் பிரச்னை சரியான முறையில் தீர்க்கப்படுவதை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு முழு ஒத்துழைப்பை வழங்கவும் தயாராக இருப்பதாக மலயா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

நேற்று பேராசிரியர் ஒருவர் தனது நிர்வாண புகைப்படங்களை ஒரு மாணவியுடன் பகிர்ந்ததாகக் கூறப்பட்டதை தொடர்ந்து , மலாயா பல்கலைக்கழகத்தின் நிர்வாகம், பாலியல் துன்புறுத்தல் கொள்கைகளை கடுமையாக்க வேண்டுமென அதன் மகளிர் நலன் மன்றம் வலியுறுத்தியது. மேலும் இதர மாணவர்களுக்கு எச்சரிக்கை புகைப்படங்களும் அச்சிடப்பட்டு வளாகத்தை சுற்றி காட்சிப்படுத்தப்பட்டதாகவும் ஆனால் சிறிது நேரத்தில் அவை அகற்றப்பட்டதாக UMFC மன்றம் தெரிவித்தது. மேலும் சம்பந்தப்பட்ட அந்த பேராசிரியரை இதர பேராசிரியர்கள் தற்காக்க முயன்றதாகவும் அந்த மன்றம் கூறியிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!