
கோலாலம்பூர், செப் 12 – எதிர்காலத்தில் தனது வம்சாவளியினருக்கு காட்ட யார் யாரோ என்னனென்னவோ சேகரித்து வைத்திருக்கிறார்கள்.
ஆனால் சிலாங்கூர், சபாக் பெர்னாமைச் சேர்ந்த 49 வயது அசீசோல் டோலா எனபவரோ சுமார் 500 பழைய கைப்பேசிகளை சேகரித்து வைத்துள்ளார். இந்த கைப்பேசிகளுக்காக அவர் இதுவரை 2 லட்சம் ரிங்கிட் வரையில் செலவும் செய்திருக்கிறார்.
30வது வயதிலிருந்தே கைப்பேசிகளைச் சேகரிப்பதைப் பொழுது போக்காக செய்து வரும் அசிசோல் Nokia 3210, Motorola D688, Ericsson S868 மற்றும் Samsung N188 உள்ளிட்ட பல வலை மோடல்களின் கைப்பேசிகளை வைத்திருக்கின்றார்.
கைப்பேசிகளை சேகரிப்பது என்னுடைய கனவாக இருந்தது. ஒவ்வொரு கைப்பேசியும் வெவ்வேறு ரகத்தில் இருக்கும். சில கைப்பேசிகளை வாங்க நான் 1000 ரிங்கிட் வரை செலவு செய்திருக்கிறேன். அதற்காக நான் பணம் சேமித்து வைத்து கைப்பேசிகளை வாங்கியுள்ளேன். இப்பொழுது என் மனைவியும் கூட என்னுடன் சேர்ந்து கைப்பேசிகளைச் சேகரிக்கத் தொடங்கிவிட்டார் என அசிசோல் தெரிவித்துள்ளார்.
தன் நண்பருடன் சேர்த்து தொடங்கவுள்ள தங்கும் விடுதியில் இந்த கைப்பேசிகளை காட்சிக்கு வைக்க திட்டமிட்டுள்ளார் அசிசோல்.
இந்த கைப்பேசிகளை விற்கும் எண்ணம் எனக்கு இல்லை. இது சேகரிப்புகளை நான் என் பேரப்பிள்ளைகளுக்கு காட்டி, இளம் தலைமுறையினர் இந்த பழங்கால கைப்பேசிகளை பாராட்டுவார்கள் என தான் எதிர்ப்பார்ப்பதாக அவர் கூறியுள்ளார்.