கோலாலம்பூர், பிப் 16 – தமது மூன்று பிள்ளைகளை பராமரிப்பதற்கு தனித்து வாழும் தாயான லோ சியு ஹோங்கிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியபோதிலும் அவரது விவகாரத்தில் பரிவுடன் நடந்துகொள்ளத் தவறிய அரசாங்கத்தை முன்னாள் அமைச்சர் பி. வேதமூர்த்தி சாடினார்.
நீதிமன்றத்தின் உத்தரவை அந்த தாய் பெற்றுள்ள போதிலும் தமது மூன்று பிள்ளைகளை மறுபடி பெறுவதற்கு அவர் ஹேபியர்ஸ் கோர்ப்பஸ் மனுவை கட்டாயமாக தாக்கல் செய்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் என வேதமூர்த்தி சுட்டிக்காட்டினார்.
ஒருதலைப்பட்சமாக தமது மூன்று பிள்ளைகளும் இஸ்லாமிய சமயத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்படும் வேளையில் அவர் உண்மையில் தமது பிள்ளைகளின் பராமரிப்புக்காக ஆட்கொணர்வு மனுவை பெற வேண்டிய அவசியமும் தேவையிலை.
அவரது விவகாரத்தில் இந்நாட்டின் சட்டத்தையும் அரசியலமைப்புசட்ட விதிமுறைகளையும் அரசாங்கம் மதிக்க வேண்டும் என மலேசிய முன்னேற்ற கட்சியின் தலைவருமான வேதமூர்த்தி கேட்டுக்கொண்டார்.