
கோலாலம்பூர், ஆக 28 – சூதாட்ட நிறுவனங்களுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பில் டான்ஸ்ரீ மற்றும் டத்தோஸ்ரீ பிரமுகர்கள் எட்பட 13 தனிப்பட்ட நபர்களை கைது செய்துள்ள எம்.ஏ.சி எனப்படும் மலேசி ஊழல் தடுப்பு ஆணையம் சில தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களின் 40 மில்லிய ரிங்கிட் மதிப்புடைய வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது. விசாரணைக்கு உதவுவதற்கான பல்வேறு தனிப்பட்ட நபர்கள் கடந்த ஒரு வாரகாமாக வெளிநாடுகளில் இருப்பதையும் எம்.ஏ.சி.சி கண்டறிந்துள்தாக அதன் விசாரணைப் பிரிவின் மூத்த இயக்குனர் டத்தோஸ்ரீ Hishamuddin Hashim தெரிவித்தார். இது தொர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.