![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/10/2969548.jpg)
கோலாலம்பூர், அக் 17 – தனிப்பட்ட மலேசியர்களின் சுயவிவரங்களை Dark Web செயலி மூலும் விற்பனை செய்யும் ஐவர் கொண்ட கும்பல் முறியடிக்கப்பட்டதோடு முதுகெலும்பாக செயல்பட்ட பாகிஸ்தான் ஆடவர் ஒருவரையும் செப்டம்பர் 5ஆம் தேதி போலீசார் கைது செய்தனர்.
OP Kapas நடவடிக்கை மூலம் கிள்ளான் பள்ளத்தாக்கின் வெவ்வேறு பகுதியில் 34 முதல் 52 வயதுடைய அனைத்து சந்தேகப் பேர்வழிகளும் கைது செய்யப்பட்டனர். அரச மலேசிய போலீஸ் படை , மலேசிய கணினி பாதுகாப்பு மற்றும் தனிநபர் ஆவண பாதுகாப்பு ஆணையத்தின் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப் புலனாய்வுத்துறையின் இயக்குனர் டத்தோஸ்ரீ ரம்லி முகமட் யூசோப் ( Ramli Mohamed Yoosuf ) கூறினார்.
‘dark web’ என்ற செயலி மூலம் பாகிஸ்தான் நபர் உட்பட இரு ஆடவர்கள் புதிய செயலியை உருவாக்கியது மற்றும் கணினி ஊடுருவல் ஹேக்கராக இருந்துள்ளதோடு இதர மூவர் ஏஜெண்டாகவும் தரவுகள் வாங்குவோரின் கடன் வசூலிப்பாளராக இருந்ததாக புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ரம்லி தெரிவித்தார்.
மலேசியர்களின் பெயர்கள், அடையாள அட்டை எண்கள், முகவரிகள், வங்கிக் கணக்கு எண்கள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட பல்வேறு தரவுகளை சேமித்து வைக்கும் ‘Query Smart Search’ என்ற செயலி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதோடு அந்த செயலி ஆர்வமுள்ள நபர்களுக்கு மாதத்திற்கு RM200 முதல் RM800 வரை வாடகை அடிப்படையில் வழங்கப்படுகிறது.