பெங்கோக், பிப் 3 – தனிமைப்படுத்தும் விதிமுறையை உட்படுத்தாத ஒரு மாத விசா திட்டத்தின் கீழ், லட்சக்கணக்கான வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை வரவேற்க தாய்லாந்து திட்டமிட்டுள்ளது.
பிப்ரவரி முதலாம் தேதி, Test & Go எனும் முன்னோடி திட்டத்தின் கீழ் சோதனை ரீதியாக, ஒரு மாதத்திற்கு மட்டும் 2 லட்சத்திலிருந்து 3 லட்சம் சுற்றுலா பயணிளை வரவேற்க திட்டமிட்டிருப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது. அத்திட்டத்தின் கீழ் பயணிக்க விரும்புபவர்கள் கட்டாயம் முழுமையாக கோவிட் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.