கோலாலம்பூர், மார்ச் 6 – கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் அத்தொற்றுக்காக தனிமைப் படுத்திக் கொண்டவர்கள், உடலில் இனியும் கோவிட் வைரஸ் இல்லாததை உறுதிப்படுத்த தொடர் சோதனையை மேற்கொள்ள வேண்டியதில்லை.
ஏனெனில் RT- PCR சோதனை, கோவிட் தொற்று கண்டு 2 அல்லது 3 மாதங்களுக்குப் பின்னரும் சுவாசப் பாதையில் அந்த வைரசை அடையாளம் காணும். ஆனால் அந்த வைரஸ் இனப்பெருக்கம் அல்லது மற்றவருக்கு தொற்றைப் பரவச் செய்யும் ஆற்றலைக் கொண்டிருக்காது என சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார்.