
மெட்ரிட், செப் 7 – தனிமையில் வாடுகிறேன்; என்னை தயவு செய்து சிறைக்கு அனுப்பி வையுங்கள் என மன்றாடி வேண்டி வருகிறார் 60 வயது வயோதிகர் ஒருவர்.
ஸ்பென்யோல் மெட்ரிட்டில் நடந்திருக்கும் இச்சம்பவத்தில், மலாகா எனும் இடத்தில் உள்ள சிறைச்சாலையின் முன்பு, அந்த வயோதிகர் பதாகை ஒன்றை பிடித்துக் கொண்டு இவ்வேண்டுகோளை செய்து வருகிறார்.
புற்றுநோய், தனிமையில் தவிப்பு, இருதய நோய் ஆகியவை இந்த ஆடவரை பாடாய் படுத்தி எடுக்கிறதாம். எனது இந்த தனிமையை போக்க எனக்கு சிறைச்சாலைதான் சிறந்த இடமாக தெரிகிறது. ஆனால், குற்றம் ஒன்றை புரிந்துவிட்டு சிறைச்சாலைக்குச் செல்ல எனக்கு மனமில்லை. எனவே எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு என்னை சிறைக்கு அனுப்பி வையுங்கள் என அவர் கூறியுள்ளார்.
5 பிள்ளைகளுக்கு தந்தையான அந்த வயோதிகர், சிறு வயதில், போதைபொருள் வைத்திருந்த குற்றத்திற்காக சிறை சென்றுள்ளாராம். என்னை மனநல மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரைத்தனர் பலர், ஆனால் அது என் பிரச்சனைக்கான தீர்வல்ல. என் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளுங்கள், அதுவரை எனது போராட்டம் தொடரும் என மன்றாடி வருகிறாராம் அவர். இதைப் பார்த்த வலைத்தளவாசிகள், இந்த விநோதமான கோரிக்கையைக் கண்டு கலவையான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.