
நெகிரி செம்பிலான், ரெம்பாவிலுள்ள வீடொன்றில், தனியாக குழந்தையை பிரசவித்த 32 வயது இந்தோனேசிய மாது ஒருவர் உயிரிழந்தார்.
நேற்று மாலை மணி மூன்று வாக்கில், அப்பெண் தனியாக குழந்தையை பிரசவித்த பின்னர் சுயநினைவை இழந்த நிலையில் இருந்ததை அப்பெண்ணின் 32 வயது கணவர் கண்டதாக, ரெம்பாவ் போலீஸ் தலைவர் செபுடி சுப்ரிடண்டன் ஹஸ்ரி முஹமட் தெரிவித்தார்.
மாலை மணி ஆறு வாக்கில், அப்பெண்ணை பரிசோதனை செய்ய வந்த கிளினிக் கெசிஹாதான் அதிகாரிகள் அவர் இறந்து விட்டதை உறுதிச் செய்தனர்.
எனினும், அப்பெண் பிரசவித்த குழந்தை பாதுகாப்பாக இருக்கும் வேளை ; தற்சமயம் ரெம்பாவ் மருத்துவமனையின் தீவிர கண்காணிப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.
அச்சம்பவம் தொடர்பில் நேற்றிரவு மணி 8.20 வாக்கில், அப்பெண்ணின் கணவர் போலீஸ் புகார் செய்தார். உயிரிழந்த பெண்ணும், அவரது கணவரும் முறையான பயண அனுமதியின்றி நாட்டில் நுழைந்தது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.